shadow

கடும் எதிர்ப்பையும் மீறி கையெழுத்தானது ஹைட்ரோகார்பன் திட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டத்தின் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு முயற்சித்தபோது தமிழகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பி போராட்டம் நடத்தப்பட்டது. நெடுவாசல் மக்களின் அனுமதி இன்றி ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்று உறுதி மொழி கொடுத்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் இன்று திடீரென நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது.

இன்று காலை 31 நிறுனங்களுடன் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்று நெடுவாசலும் என்பதால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஜெம் லெபாரெட்ரிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply