shadow

கடந்த 25 வருடங்களில் பங்குகள்தான் சிறந்த முதலீடு: சென்ட்ரம் ஆய்வில் தகவல்

share
கடந்த 25 வருடங்களில் பங்கு முதலீடுகளே அதிக வருமானத்தை கொடுத்துள்ளது என்று புரோக்கரேஜ் நிறுவனமான சென்ட்ரம் கூறியிருக்கிறது. சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய குறியீடுகள் ஆண்டுக்கு 12% வரு மானத்தை கடந்த 25 வருடங் களில் கொடுத்துள்ளது. சர்வதேச அளவில் உள்ள அதிக வருமானம் கொடுத்த குறியீடுகளாக சென் செக்ஸ் மற்றும் நிப்டி இருக்கிறது.

ஷாங்காய் காம்போசிட் இன்டெக்ஸ் முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த 25 வருட காலத்தில் 12.9% வருமானம் இந்த குறியீடு வழங்கியுள்ளது.

கரன்ஸி, ரியல் எஸ்டேட், கமாடிட்டி உள்ளிட்ட சொத்து களுடன் ஒப்பிடும்போது நீண்டகால அடிப்படையில் பங்குச்சந்தை நல்ல வரு மானத்தை கொடுத்துள்ளது. இதர முதலீடுகள் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கொடுத்தாலும் நீண்ட காலத்தில் பங்குச்சந்தை மட்டுமே அதிக வருமானத்தை கொடுத்திருப்பதாக சென்ட்ரம் நிறுவனத்தின் வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த 25 வருட பட்டியலில் ஷாங்காய் முதல் இடத்தில் இருந்தாலும், கடந்த பத்து வருட பட்டியலில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த பத்து வருட அடிப்படையில் சென்செக்ஸ் 10.1 சதவீதம் மற்றும் நிப்டி 10.7 சதவீதம் வருமானத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனால் ஷாங்காய் குறியீடு 6.7 சதவீதம் மட்டுமே கொடுத்திருக்கிறது.

.

Leave a Reply