shadow

ஓவியாவின் ’90ml’ ரிலீஸ் தேதி அறிவிப்பில் ஒரு ஆச்சரியம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா முக்கிய வேடத்தில் நடித்து வெளிவரும் முதல் படமான ’90ml’ திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக அதிகாலை ஐந்து மணி காட்சியும் திரையிடப்படவிருப்பதாகவும் ஓவியா தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும் ஐந்து மணி காட்சியின்போது தான் ரசிகர்களை தியேட்டரில் சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ஒருசில நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்தேஐந்து மணி காட்சிக்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply