ஓபிஎஸ் மீண்டும் முதல்வர் ஆவார்: தங்க தமிழ்ச்செல்வன்

எடப்பாடி பழனிசாமியை தூக்கிவிட்டு ஓபிஎஸ்சை மீண்டும் பாஜக தமிழக முதல்வராக்கும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் ஓபிஎஸ் மகன் தவிர அதிமுக கூட்டணி வெற்றி பெறவில்லை. குறிப்பாக பாஜகவின் 5 வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் கோபத்தில் உள்ள பாஜக, அவரை முதல்வர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு மீண்டும் ஓபிஎஸ்சை முதல்வாராக்கும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக நான் சொன்னது போல ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை என்றும்,  பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் மக்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply