shadow

ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் அட்டை இணைக்க வேண்டுமா? அமைச்சர் பதில்

மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான ஆதார் அட்டை திட்டத்தின்படி கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள பெரும்பாலானோர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த ஆதார் அட்டையை அனைத்து முக்கிய ஆவணங்களிலும் இணைக்கும் பணியும் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது ஓட்டுனர் உரிமத்துடனும் ஆதார் அட்டைய இணைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் மேலும் கூறியபோது, ‘ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். விரைவில் இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார். மேலும் சாலைகளில் மதுபோதையிலோ அல்லது வேறு காரணங்களினால் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுனர்களை இதன் மூலம் எளிதில் பிடித்து விட முடியும் என்றும், மாநிலம் விட்டு வேறு மாநிலத்துக்கு தப்பிச்சென்றாலும் ஓட்டுனரை கைது செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஒருவர் தன் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்றும் கைரேகையினை மாற்ற முடியாது எனவும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Leave a Reply