ஒரே நேரத்தில் லைகாவின் இரண்டு படங்களில் கமிட் ஆன நிவேதா பேத்ராஜ்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘தர்பார்’ படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்க நிவேதா பேத்ராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இன்னொரு படத்தை ‘துருவங்கள் 16’, ‘நரகாசுரன்’ படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் அருண்விஜய் ஹீரோவாக நடிக்கவுள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக நடிக்க நிவேதா பேத்ராஜ் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது

இதனால் ஒரே நேரத்தில் லைகா தயாரிக்கும் இரண்டு முக்கிய படங்களில் நிவேதா பேத்ராஜ் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply