ஒரே நாட்டில் ஒரே மொழி இந்தி தான்: அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு

இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்றும் இந்தியா என்பது பல மொழிகள் கொண்ட நாடு என்றாலும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும் என்றும் ம்த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விழா ஒன்றில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

மத்தியில் பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றதிலிருந்து சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் மத்திய அரசு சமீபத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் ஆகியவைகளை அடுத்து இன்று ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அரங்கில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உள்துறை அமைச்சரின் இந்த பேச்சுக்கு வழக்கம்போல் தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒரே நாடு ஒரே மொழி இந்தி என்ற கருத்தை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இந்திய நாட்டில் இந்தி மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றால் நாட்டில் மயில்களை விட காக்கைகளை எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் காக்கைகளை தேசிய பறவையாக முடியுமா? என்று அண்ணா கூறியிருந்ததை வைகைச்செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார்

எதையும் நடைமுறைப்படுத்தும் பெரும்பான்மை இருப்பதால் சர்வாதிகார முறையில் கருத்து தெரிவித்துள்ளார்கள் என்று அமித்ஷா பேச்சு குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்

Leave a Reply