shadow

ஒரே ஓவரில் 43 ரன்கள்: கிரிக்கெட்டில் சாதனை

ஒரு ஓவரில் அதிகபட்சமாக 36 ரன்களே அடிக்கமுடியும் என்ற நிலையில் ஒரே ஓவரில் 43 ரன்கள் அடித்து கிரிக்கெட் உலகில் ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் – சென்டிரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் சென்டிரல் அணியின் வில்லெம் லடிக் தனது கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஹாம்ப்டன் பவுண்டரி அடித்தார். அடுத்த இரண்டு பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இரண்டு பந்துகளும் நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தில் ஒரு ரன் அடித்தார்.

கடைசி மூன்று பந்துகளையும் கார்ட்டர் சிக்சருக்கு தூககினார். இதனால் இந்த ஓவரில் 43 ரன்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை பதிவு செய்யப்பட்டது. இதற்கு முன்னர் வங்காள தேசத்தில் கடந்த 2013-ல் நடைபெற்ற டாக்கா ப்ரீமியர் லீக் போட்டி ஒன்றில் 39 ரன்கள் அடிக்கப்பட்டதே ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் என்ற சாதனை இருந்துள்ளது.

Leave a Reply