shadow

ஒரு சின்ன பேட்டரிக்கு இவ்வளவு பெரிய அட்டைப்பெட்டியா? அமேசானை கலாய்த்த வாடிக்கையாளர்

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஹாம்ப்ஷையர் என்ற பகுதியை சேர்ந்த மாட் ஹாரிஸ் என்ற 38 வயது நபர் அமேசான் இணையதளத்தில் 3 வோல்ட் பேட்டரி ஒன்றை ஆர்டர் செய்தார்.

இந்த பேட்டரி ஒரு பெரிய அட்டைப்பெட்டியில் பார்சலாக வந்தது. அந்த பார்சலை அவர் ஒவ்வொன்றாக பிரித்து அந்த பேட்டரியை கையில் எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

இந்த பார்சலையும் தான் ஆர்டர் செய்த பேட்டரியையும் வீடியோவாக எடுத்து மாட் ஹாரிஸ் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார். மேலும் இந்த வீடியோவில் அமேசானை கலாய்த்தும் அவர் பதிவு செய்த கருத்துக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply