ஐஐடி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பா?

தமிழகத்தில் நடைபெறும் ஒரு சில மத்திய அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவதாக ஏற்கனவே தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்

இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள சென்னை ஐஐடி வைரவிழா நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் தமிழ் ஆர்வலர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்

நாளை மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் வைர விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழாவின் ஆரம்பத்தில் வந்தே மாதரம் பாடலும், முடிவில் தேசிய கீதம் பாடலும் பாடப்படும் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது

சென்னை ஐஐடி வைர விழா நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதில் வந்தே மாதரம் பாடலைப் பாட ஐஐடியினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் நாளை நடைபெறும் விழாவில் தமிழ் தாய் வாழ்த்தும் சேர்ந்து பாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply