shadow

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தையும் வளைக்க சிபிஐ திட்டம்?

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டு அவருக்கு நீதிமன்றம் 5 நாட்கள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டுள்ள நிலையில், அடுத்ததாக, இந்த வழக்கில் ப.சிதம்பரத்தையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே எந்த நேரமும் ப.,சிதம்பரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

ஆங்கில நாளேடு ஒன்றுக்கு சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், “ ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்றவழக்கில், ப.சிதம்பரம் நேரடியாக குற்றம்சாட்டப்படவில்லை. குற்றவாளியாகவும் சேர்க்கப்படவில்லை. ஆனால், இந்த பணப்பரிமாற்றம் அனைத்தும் அவரின் பதவிக்காலத்தில் நடந்துள்ளது. மேலும், அவர் நிதி அமைச்சராக இருந்த காலத்தில்தான் அனுமதியும் தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திராணி முகர்ஜியும், பீட்டர் முகர்ஜியும் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆதலால், அன்னியமுதலீட்டு மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதில் ப.சிதம்பரத்தின் பங்கு என்ன என்பதை விசாரிக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ப.சிதம்பரம் அவர்களை விசாரணை செய்ய அவருக்கு விரைவில் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்புவார்கள் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply