shadow

ஏப்ரலில் ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் இடங்கள்


ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சென்னையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 ஆகிய முறையே ஏப்ரல் 29, 30 ஆகிய நாள்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் சென்னை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் மையங்களில் மார்ச் 6 முதல் 22-ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 வரை விநியோகிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் மையங்களின் விவரங்களைக் காணலாம்.
ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். இரு தேர்வுகளை எழுத விரும்புவோர் தனித்தனியான விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் இடங்கள்:-
1. அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, எண் 9, காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி.
2. அரசு மதரஸா ஐ அசாம் மேல்நிலைப்பள்ளி, எண்.779, அண்ணா சாலை.
3. பி.டி.லி. செங்கல்வராய நாயக்கர் மேல்நிலைப்பள்ளி, எண். 5, ஜெனரல் காலின்ஸ் சாலை, சூளை.
4. தொன்பாஸ்கோ மேல்நிலை ப்பள்ளி, எண். 31, வேப்பேரி நெடுஞ்சாலை,வேப்பேரி.
5. மலையாள வித்யாலயம் உயர்நிலைப்பள்ளி, எண்.52, வெங்கிடதிரி தெரு, குயப்பேட்டை, புரசைவாக்கம்.
6. டி.டி.வி. மேல்நிலைப்பள்ளி, எண்.97, மின்ட் தெரு, சௌகார்பேட்டை.
7. பச்சையப்பா கல்லூரி மேல்நிலைப்பள்ளி, எண். 187, என்.எஸ்.சி. போஸ் சாலை, பிராட்வே.
8. சென்னை உயர்நிலைப் பள்ளி, எண். 109, எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை.
9. சென்னை உயர்நிலைப் பள்ளி, எண்.76, 2-ஆவது தெரு, காமராஜ் அவென்யு, அடையாறு.
10. கேசரி மேல்நிலைப்பள்ளி, எண்.8, தியாகராயா சாலை, தியாகராய நகர்.
11. அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, எண்.152, உஸ்மான் சாலை, தியாகராய நகர்.
12. காவேரி உயர்நிலைப்பள்ளி, எண்.5, பாரதியார் தெரு, சாலிகிராமம்.
13. சென்னை உயர்நிலைப் பள்ளி, எண்.53, மேற்கு ஆற்றுச்சாலை, சிந்தாதிரிப்பேட்டை.
14. அரசு உயர்நிலைப்பள்ளி, தெற்கு ஜெகன்னாத நகர், வில்லிவாக்கம்.
15. கணபதி ஐயர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, எண்.28, காரன் ஸ்மித் சாலை, கோபாலபுரம்.
16. சென்னை உயர்நிலைப்பள்ளி, எண். 21, சோமையா ராஜா தெரு, அகரம்.
17. ஸ்ரீ சம்பாலால் பகாரியா ஜெயின் மேல்நிலைப்பள்ளி, எண்.200, பேப்பர் மில்ஸ் சாலை, பெரம்பூர்.

பூர்த்தி செய்து அளிக்க..!
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழ்க்காணும் மையங்களில் மார்ச் 6 முதல் 23-ஆம் தேதி வரையுள்ள காலை 9 முதல் மாலை 5 மணி வரை திரும்ப பெறப்படும். ஒரு மாவட்டத்தில் விண்ணப்பம் பெற்றிருந்தாலும் மற்றொரு மாவட்டத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பதை அளிக்கலாம்.
* மாவட்ட கல்வி அலுவலகங்கள் (வட சென்னை, தென் சென்னை), டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், எழும்பூர்.
* சிஎஸ்ஐ ராஜகோபால் மேல்நிலைப் பள்ளி, எண் 34, கிழக்கு கல் மண்டபம் தெரு, ராயபுரம்.
* மாவட்டக் கல்வி அலுவலகம், மத்திய சென்னை, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகம்.

Leave a Reply