எல்.ஐ.சியில் 8500 காலியிடங்கள்: கைநிறைய சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்!

எல்.ஐ.சி.யில் வேலை என்றாலே கைநிறைய சம்பளம், வேலை நிரந்தரம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் எல்.ஐ.சியில் உதவியாளர் பணிக்கான 8,500 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எல்.ஐ.சி.யின் licindia.in என்ற இணையத்தில் இதற்கான விரிவான விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டத் தேர்வு, பிரதானத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேலே குறிப்பிட்ட இணையதளத்திற்குச் சென்று, தங்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
ரூ.50 – SC/ST பிரிவினருக்கு
ரூ.600 – பிற பிரிவினருக்கு

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: அக்டோபர் 1, 2019. இன்னும் 13 நாட்களே இருப்பதால் தகுதியும் திறமையும் இருப்பவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்

Leave a Reply