shadow

எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்ஜிஆர் உருவத்துடன் கூடிய நாணயங்கள் வெளியீடு

மக்கள் திலகம் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது

இந்த நிலையில் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை அடுத்து அவரது உருவம் பொதித்த ரூ.100 மற்றும் ரூ.5 நாணயங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதேபோல் கர்நாடக இசை கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் நூற்றாண்டு விழாவை அடுத்து அவரது உருவம் பொறித்த ரூ.100 மற்றும் ரூ.10 நாணயங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ரூ.100 நாணயம் இப்பொழுதுதான் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளதால் அந்த நாணயம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Leave a Reply