என் உறுப்புகளில் தூண்டுதலே இல்லை: பல்கலை மீது புகார் கூறிய பி.எச்.டி மாணவர்

கடந்த 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் ஒருவர் பி.எச்.டி படிப்புக்காக சேர்ந்தார். குல்தீப் மான் என்ற பெயருடைய அவர் மீது பல்கலைக்கழக நிர்வாகம் ஒருசில குற்றச்சாட்டுக்களை சும்த்தி அவரை பல்கலையில் இருந்து நீக்கியது.

இதன் காரணமாக, தான் இரவு நேரத்தில் தூங்காமல் மன அழுத்தத்தில் இருப்பதாக குல்டிப் மான் தெரிவித்துள்ளார். இனி உயர் படிப்பை எவ்வாறு தன்னால் தொடர இயலும் என்றும் தனக்குள்ளேயே கேள்வி எழுப்பி வாழ்க்கையை குறித்து அச்சம் அடைந்துள்ளார். மேலும் இரவில் தூங்காமல் இருந்ததால் தனது செக்ஸ் வாழ்க்கை பாதிப்பு அடைந்துவிட்டதாகவும், தன்னுடிய உறுப்புகளில் தூண்டுதலே இல்லை என்றும் குல்தீப் மான் தெரிவித்துள்ளார். தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய பல்கலைக்கழகம் $3.125 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Leave a Reply