திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று திருச்சியில் நடந்த பிரமாண்டமான மாநாட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒன்று இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்ற இந்த திட்டம்

ஏற்கனவே கமல்ஹாசனால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை முக ஸ்டாலின் காப்பியடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் என்னுடைய திட்டங்களை முக ஸ்டாலின் காப்பி அடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்

நாங்கள் வகுத்துக் கொடுத்த திட்டங்கள் துண்டுச்சீட்டுகளாக மாறி திமுக தலைவர் இடத்தில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்கு திமுக தரப்பில் என்ன பதில் அளிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply