shadow

எனக்கு இருக்கும் புகழை பார்த்து அச்சப்படுகின்றனர்: பாஜகவினர் மீது காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவில் உறுப்பினர் என்பதும், பாரதிய ஜனதாவின் இளைஞர் அணி பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவில் செயற்குழுவில் உறுப்பினர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் காயத்ரி ரகுராம் சமீபத்தில் போதையில் கார் ஓட்டி அபராதம் கட்டியதாக சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை காயத்ரி ரகுராம் மறுத்திருந்தார்.

இந்த நிலையில் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் தான் இருக்கும் பாஜக மீதே விமர்சனம் செய்துள்ளார். தமிழக பாஜகவில் உட்கட்சி அரசியல் இருப்பதாகவும், தனக்கு இருக்கும் புகழை பார்த்து ஒருசிலர் அச்சப்படுவதாகவும் கூறிய காயத்ரி, தன் மீது களங்கம் சுமத்த சிலருக்கு பணம் வழங்கப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டதாகவும் பதிவு செய்துள்ளார்.

மேலும் தான் பருந்துகளால் நான் பந்தாடப்படுவதாகவும். எல்லாம் கர்மா. அவர்கள் என்றாவது வெல்ல வேண்டும் என பிரார்த்திப்பதாகவும், காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்

 

Leave a Reply