எனக்கு அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கு இல்லை: இஸ்ரோ சிவன்

இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் ஒருசில போலியான டுவிட்டர் கணக்குகள் டுவிட்டரில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் பல்வேறு வகையிலான டுவீட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிவன் அவர்கள் விளக்கம் அளிக்கையில் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமான கணக்கு எனக்கு இல்லை என்றும் எனது பெயரில் உலா வரும் கணக்குகள் போலியானவை என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே சந்திராயன் 2 குறித்து சந்தேகம் எழுப்புபவர்கள் இஸ்ரோவின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறும், போலியான சிவன் கணக்கை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது

 

Leave a Reply