எந்த மாற்றமும் இல்லை: ஜூன் 3 பள்ளி திறப்பு உறுதி என அமைச்சர் தகவல்

தமிழகத்தில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

கடுமையான வெயில் காரணமாக ஜூன் 3ஆம் தேதிக்கு பதில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என நேற்று புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவித்ததால் தமிழகத்திலும் பள்ளி திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படும் என கூறப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்துள்ளார்

Leave a Reply