shadow

எந்தெந்த காய்கறி, பழங்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன?

உடல்நலம் சீராக இருக்க வேண்டும் என்றால் சைவ உணவே சிறந்தது என்றும் குறிப்பாக காய்கறி, பழங்கள் அதிகம் உண்பவர்களுக்கு எந்தவித வியாதிகளும் வராது என்றும் பெரியோர்கள் கூறுவதுண்டு. அந்த வகையில் எந்தெந்த காய்கறி, பழங்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? என்பதை தற்போது பார்ப்போம்

தக்காளி பழத்தில் சர்க்கரை துளி அளவும் இல்லை. கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் தயங்காமல் தக்காளியை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும் தக்காளி உதவுகிறது. இரவில் பார்வை குறைபாடு, சரும பாதிப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தக்காளி பாதுகாக்கும்.

* பப்பாளி பழத்தில் இருக்கும் ஒருவகை ஊட்டச்சத்து செரிமான கோளாறு பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் சோடியம் அளவும் குறைவு. அது கொழுப்பு மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

* கீரையில் போலேட், மாங்கனீஸ், இரும்பு மற்றும் பலவகை வைட்டமின் சத்துக்களும் அதிகம் நிறைந்திருக்கின்றன. 100 கிராம் கீரையில் 0.8 கிராம் அளவே சர்க்கரை உள்ளது.

* தண்ணீர்விட்டான்கிழங்கில் சர்க்கரையும், கொழுப்பும் துளி அளவும் இல்லை. வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

* கிரேப் புரூட் எனும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இதிலும் கொழுப்பு மற்றும் சர்க்கரை இல்லை. சளி, இருமல் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். இந்த பழத்தை போதுமான அளவு சாப்பிடலாம்.

* முட்டைகோசில் சர்க்கரை இல்லை. வைட்டமின்களும், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களும் நிறைந்திருக்கின்றன.

* ப்ராக்கோலியில் குறைந்த அளவே சர்க்கரை கலந்திருக்கிறது. கொழுப்பு இல்லை. இதில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் உடலிலுள்ள செல்களுக்கு புத்துயிர் அளிக்கும்.

* நீரிழிவு நோயாளிகள் தினமும் பீட்ரூட் சாப்பிட்டு வரலாம். இதில் சர்க்கரை கிடையாது. பொட்டாசியம், இரும்பு, நார்ச்சத்துகள் அதில் நிரம்பியுள்ளன. பீட்டானின் என்றழைக்கப்படும் ஆன்டி ஆக்சிடென்டும் அதில் உள்ளது.

Leave a Reply