shadow

சூர்யா நடித்த 40வது திரைப்படத்தின் டைட்டில் எதற்கும் துணிந்தவன் என நேற்று மாலை வெளியிடப்பட்டது என்பது தெரிந்ததே

இதனை அடுத்து நேற்று நள்ளிரவு எதற்கும் துணிந்தவன் படத்தின் இரண்டாவது லுக் வெளியானது

இந்தநிலையில் சற்றுமுன் எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது வகை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது

ஒரு திரைப்படத்தின் மூன்று லுக்குகள் அடுத்தடுத்து வெளியாகியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் சந்தோசத்தை அளித்துள்ளது

பாண்டிராஜ் இயக்கத்தில் டி இமான் இசையில் சூர்யா, பிரியங்கா நடித்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது