எடியூரப்பாவின் நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பு சட்டவிரோதமானது: சித்தராமையா

எடியூரப்பா தாக்கல் செய்துள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் சட்டவிரோதமானது என்று சட்டசபையின் தீர்மானத்தின் விவாதத்தின்போது காங்கிரஸ் குழு தலைவர் சித்தராமையா ஆவேசமாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது: பாஜகவுக்கு கர்நாடகாவில் ஆட்சி அமைக்க மக்கள் ஆதரவளிக்கவில்லை என்பதுதான் இதன் அர்த்தம். இப்போது முதல்வராகியுள்ளார். அவர் எஞ்சிய பதவி காலத்தை முதல்வராக பூர்த்தி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அது நடக்காது என்பதே கள நிலவரம்.

சில எம்எல்ஏக்களை திருப்திப்படுத்தி, ஆட்சியை கலைத்து முதல்வர் நாற்காலியில் வந்து அமர்ந்துள்ளார். எடியூரப்பா தாக்கல் செய்துள்ள நம்பிக்கைத் தீர்மானம் என்பது சட்டவிரோதமானது. ஜனநாயக விரோதமானது. அதற்கு எங்களது ஆதரவு இல்லை. இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

Leave a Reply