எக்செல் ஷீட்டில் ஒரே நேரத்தில் பல எண்களை காப்பி-பேஸ்ட் செய்வது எப்படி>?


பெரும்பாலான சாப்டுவேர்களில் ஒரு எண்ணை ஒரு முறை காப்பி செய்து விட்டு மீண்டும் மற்றொரு எண்ணை காப்பி செய்தால் கடைசியாக காப்பி செய்த எண் மட்டுமே பேஸ்ட் ஆகும். ஆனால் எக்செல் ஷீட்டில் அப்படி இல்லை, உங்களால் இரு எண்களையும் காப்பி செய்து பேஸ்ட் செய்ய முடியும். இதற்கு என்ன செய்ய் வேண்டும் என்று பார்ப்போமா!

முதலில் எக்செல் ஷீட்டை ஓப்பன் செய்து முதலில் ஒரு எண்ணை காப்பி செய்யுங்கள் பின்பு மற்றொரு எண்ணை காப்பி செய்யுங்கள். தற்போது alt + H ஐ பிரஸ் செய்யுங்கள். அதன்பின்னர் F, O ஆகிய இரண்டு பட்டன்களை தனித்தனியாக பிரஸ் செய்யுங்கள்

இப்பொழுது உங்களுடைய எக்செல் ஷீட்டில் இடதுபுறம் ஒரு பாக்ஸ் ஓப்பன் ஆகும். இந்த பாக்ஸில் நீங்கள் காப்பி செய்த இரண்டு எண்களும் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான எண்ணை கிளிக் செய்தால் அது உங்களுடைய எக்செல் ஷீட்டில் பேஸ்ட் ஆகி விடும். இதேபோல் எத்தனை எண்களை வேண்டுமானாலும் காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளலாம். அதேபோல் ‘பேஸ்ட் ஆல்’ என்பதை க்ளிக் செய்தால் இரண்டு எண்களும் பேஸ்ட் ஆகிவிடும்.

எக்செல் ஷீட், காப்பி, பேஸ்ட், எண்,

Leave a Reply