உள்ளாட்சி தேர்தல் முடிவு:  அதிமுகவை முக ஸ்டாலினால் வீழ்த்த முடியாதா?

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக, இனி அவ்வளவுதான் என்றும் திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் மிக எளிதில் ஆட்சியைப் பிடித்து விடும் என்றும் கூறப்பட்டது

ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் நல்ல வாக்குகளை பெற்றது. அதன் பின்னர் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அதிமுக, தனது தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்தது

இந்த நிலையில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு இணையாக அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது அதிமுகவினர்களுக்கு புது தெம்பையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

தற்போதைய நிலையை வைத்து பார்க்கும் போது திமுக, அதிமுகவை வீழ்த்துவது சந்தேகமே என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் வரும் சட்டமன்ற தேர்தலில் களத்தில் குதிக்க உள்ளதால் ஓட்டுக்கள் பிரியும் என்பது குறிப்பிடத்தக்கது

இதனால் அதிமுகவை வீழ்த்தி முக ஸ்டாலின் முதல்வர் ஆவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply