உள்ளாட்சி தேர்தல் குறித்து மேலும் இரண்டு வழக்குகள்: பெரும் பரபரப்பு

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் இன்று உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. அனைத்து பகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என திமுக தரப்பில் இருந்து ஆர்எஸ் பாரதி அவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு வரும் 30ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் சற்றுமுன் சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஒரு வழக்கை சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்துள்ளது இந்த மனுவில் ’நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply