உள்ளாட்சி தேர்தல்: எந்த வண்ண வாக்கு எந்த உறுப்பினருக்கு என்று தெரியுமா?

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு என்று முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஒவ்வொருவரும் 4 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும். வெள்ளை வாக்குச்சீட்டு, இளஞ்சிவப்பு வாக்குச்சீட்டு, பச்சை வாக்குச்சீட்டு, மஞ்சள் வாக்குச்சீட்டு என நான்கு விதமான வாக்குச்சீட்டுகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்

இந்த நான்கு வாக்கு சீட்டுகளில் ஒவ்வொரு வாக்குச் சீட்டும் எந்தெந்த உறுப்பினர்களுக்கு உண்டானது என்பது குறித்து தற்போது பார்ப்போம்

கிராம ஊராட்சி உறுப்பினர் – வெள்ளை வாக்கு சீட்டு

கிராம ஊராட்சி தலைவர் – இளஞ்சிவப்பு வாக்கு சீட்டு

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் – பச்சை வாக்கு சீட்டு

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் – மஞ்சள் வாக்கு சீட்டு

Leave a Reply