shadow

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இங்கிலாந்து நாட்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இந்திய அணியின் ரோகித் சர்மா 34 ரன்களும், சுபன் கில் 28 ரன்களுக்கும், புஜாரே 8 ரன்களுக்கு அவுட் ஆன நிலையில் விராத் கோலி மற்றும் ரஹானே ஆடி வருகின்றனர்

நேற்று 65ஆவது ஓவர் வீசப்பட்ட போது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக நேற்றைய ஆட்டம் நிறுத்தப்படுவதாக அறிவித்தபோது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 44 ரன்களும் ரஹானே 29 ரன்களில் எடுத்து களத்தில் உள்ளனர்.