பிரபல கிரிக்கெட் வீரரின் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் கிண்டல்

உலக கோப்பையை வென்ற பின்னரே எனது திருமணம் நடைபெறும் என ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி பந்து வீச்சாளரும் ஆல்ரவுண்டருமான ரஷீத்கான் கூறியுள்ளார். அவரது பேட்டி நெட்டிசன்கள் கிண்டலடித்து உள்ளனர்

பலர் அவரது வயதான தோற்றம் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து ரஷித் கான் இன்னும் திருமணத்திற்காக காத்திருக்கின்றார் என்று பதிவு செய்துள்ளனர்,

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகளை ஒப்பிடும்போது ஆப்கானிஸ்தான் அணி இன்னும் சின்ன அணிதான் என்பதும் இந்த அணிகளை எல்லாம் வீழ்த்தி உலகக் கோப்பையை ஆப்கானிஸ்தானை வாங்குவது என்பது கனவில் கூட நடக்காது என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்

இருப்பினும் ரஷித்கானின் நம்பிக்கைக்கு பாராட்டு தெரிவித்தும் சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply