உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.14 கோடியாகும் என்றும் உலகளவில் 16 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 4.95 கோடியாகும் என்றும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் 1,06,566 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,282,794 என்பதும் அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 302,696 என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் 98 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இதுவரை 1.42 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த ஒரே நாளில் 29,039 பேர் பாதிக்கப்பட்டனர்.

Leave a Reply