உலகில் கொரோனா தொற்றால் 3,87,29,168 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,96,320 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலகில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,91,11,241 ஆக உயர்ந்துள்ளது என்பதும், உலகில் கொரோனா பாதிப்புடன் 85,21,607 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 967 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் 716 பேர் ஒரே நாளில் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 694 பேர் மரணம் அடைந்துள்ளனர். மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 475 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை 221,840 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 151,779 பேர் பலி என்பதும், இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 111,311 பேர் உயிரிழப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply