shadow

உலகின் சிறந்த நாடுகள் பட்டியல். சுவீடன் முதலிடம். இந்தியாவுக்கு 70வது இடம்
sweden
உலகில் உள்ள 163 நாடுகளில் சிறந்த நாடு எது என்ற கருத்துக்கணிப்பை லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று கடந்த சில மாதங்களாக சர்வே செய்து அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த முடிவின்படி உலகிலேயே சிறந்த நாடாக சுவீடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 70வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பத்து இடங்களை சுவீடன், டென்மார்க், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி பின்லாந்து, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் பெற்றுள்ளன.

இந்த சர்வே ஐ.நா. மற்றும் உலக வங்கி பட்டியலில் அறிவியல், கலாசாரம், அமைதி, பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், சமத்துவம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட தன்மையை பொறுத்து சிறந்த நாடுகள் தரம்பிரிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply