shadow

உலகின் அழகான வீட்டு வகை

நம்முடைய நாட்டில் பாரம்பரியமான வீட்டுக் கட்டுமானக் கலையில் பல வகைகள் உள்ளன. உதாரணமாகத் தமிழ்நாட்டில் செட்டிநாட்டு வீடுகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதுபோல் உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகளில் மரபான வீடுகளில் பல வகைகள் உள்ளன. ஐரோப்பியர்கள் படையெடுப்புக்குப் பிறகு அங்குள்ள வீடுகளின் பாதிப்பில் பல வீடுகள் உருவாக்கப்பட்டன. இவை காலனிய வீடுகள் என அழைக்கப்பட்டன. ஆர்ட் டெக்கோ வீடுகள் என அழைக்கப்படும் வீடுகளை இன்று நம் நாட்டிலும் காண முடியும். இம்மாதிரி வீடுகளில் சிறந்த அழகான வீட்டுக் கட்டுமான வகை:

காட்டேஜ் வீடு

இந்த வகை வீடுகள் ஐரோப்பிய விவசாயிகளின் வீடுகளின் கட்டு மானத்தை அடிப்படையாகக் கொண் டவை. காட்டேஜ் (Cottage) என்னும் சொல்லே விவசாயி (cotter-farmer) என்னும் சொல்லில் இருந்துதான் வருகிறது.

வரிசை வீடுகள்

19-ம் நூற்றாண்டில் இந்த வீட்டுக் கட்டுமான முறை புகழ்பெற்றது. நம் நாட்டில் இதை லைன் வீடுகள் என அழைக்கிறோம். நகரங்களில் மட்டும்தான் இந்த வகை வீடுகளைப் பார்க்க முடியும். நகரமயமாக்கலுக்குப் பிறகு இந்த வகை வீடுகள் உலகம் முழ்வதும் பரவலாகியது.

ப்யூப்லோ மறுமலர்ச்சி

பூர்வ குடி அமெரிக்கர்களான ப்யூப்லோ இன மக்களின் வீட்டுக் கட்டுமான வகைதான் இந்த ப்யூப்லோ மறுமலர்ச்சி வீடுகள். நம் நாட்டில் உள்ள மண் வீடு போன்ற தோற்றம் கொண்ட வீடுகள் இவை.

கிரேக்க மறுமலர்ச்சி

இந்த வகை வீடுகள் 1830களிலும் 1940களிலும் அமெரிக்காவில் பிரபலமான ஒரு கட்டுமான முறை. இந்த வகை வீடுகள் கிரேக்கக் கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டவை. கிட்டத்தட்ட காலனிய வீடுகளின் அமைப்பு முறையைப் போன்றது. ஆனால் பூ முகத்துடன் கூடிய முகப்பு பிரம்மாண்டமான தூண்களுடன் இருக்கும். சென்னையில்கூடப் பழங்காலத்து வீடுகள் இந்த வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆர்ட் டெக்கோ வீடுகள்

பண்டைய எகிப்து, மியாமி கடற்கரை வீடுகள் போன்ற பல பாதிப்புகளால் இந்த வகை வீடுகள் உருவாக்கப்படுகின்றன. தட்டையான வெளிப்பரப்புடன் உருவாக்கப்படும் இதன் முன்பகுதி கொஞ்சம் அலங்காரங்களுடன் இருக்கும்.

காலனிய வீடுகள்

இந்த வகை வீடுகள் 17-ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் அதிகமாகக் கட்டப்பட்டன. இந்த வகை வீடுகளில் பெரிய ஜன்னல்களுடன் கட்டப்பட்டன. ஓட்டுக் கூரையுடன் இவற்றில் புகைக் கூண்டும் இருக்கும்.

Leave a Reply