உலகப்போருக்கு காரணமாகுமா கொரோனா வைரஸ்?

சீனாவை கடந்த சில வாரங்களாக பயமுறுத்தி வரும் இந்த கொரோனோ வைரசுக்கு இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது

இந்த நிலையில் இப்படி ஒரு வைரஸ் உலகம் முழுவதும் தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னரே ஒரு மருத்துவ கூட்டமொன்றில் பேசியுள்ளார்

உலகம் முழுவதும் ஒரு பயங்கரமான வைரஸ் தாக்கும் என்றும் அந்த வைரஸால் உலகப் போர் மூளக்கூட வாய்ப்பு இருப்பதாகவும் எனவே வைரஸ் தாக்குதலுக்கு தாக்குதலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் அந்தக் கூட்டத்தில் பில்கேட்ஸ் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply