உலகப்புகழ் பெற்று ஹனிமூன் நகருக்கு விக்னேஷ் சிவனுடன் சென்ற நயன்தாரா

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நடிகை நயன்தாரா, கடந்த சில நாட்களாக தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் உலகை ஒரு ரவுண்டு அடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் நேற்று கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் இருந்து உலகப்புகழ் பெற்று ஹனிமூன் நகரான சானிடோரினி என்ற நகரத்திற்கு விக்னேஷ் சிவனுடன் சென்றுள்ளார்.

இருவருடைய விமான டிக்கெட்டை விக்னேஷ்சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ‘நான் வாழ்நாளில் செல்ல வேண்டும் என்று நினைத்த கனவுப்பகுதிக்கு பறந்து கொண்டிருக்கின்றோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்கு பின்னர் இதே நகருக்குத்தான் இருவரும் ஹனிமூன் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply