உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் புதிய பொறுப்பா?

உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞர் அணியில் பொறுப்பு வழங்க அக்கட்சியின் நிர்வாகிகள், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

திமுகவில் ஏற்கனவே கருணாநிதி குடும்பத்தினர்களாகிய மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன் உள்பட ஒருசிலர் முக்கிய பதவியில் இருந்து வரும் நிலையில் கடந்த தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் செய்தவர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின்

இந்த நிலையில் உதயநிதிக்கு திமுக இளைஞர் அணியில் பொறுப்பு வழங்க அக்கட்சியின் நிர்வாகிகள் ஸ்டாலினிடம் வலியுறுத்துவதாகவும், ஸ்டாலின் இதுகுறித்து விரைவில் முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply