பாமக பிரமுகர் காடுவெட்டி குரு அவர்களின் மகன் கனலரசன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார். இதுகுறித்து உதயநிதி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

காடுவெட்டி குரு அவர்களின் மகன்-மாவீரன் மஞ்சள்படையின் தலைவர் தம்பி கனலரசன் அவர்கள் என்னை சந்தித்து தங்கள் இயக்கத்தின் ஆதரவை தி.மு.க-க்கு தெரிவித்தார்.

ஆக்கப்பூர்வமான பல கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவருக்கும் அவரின் இயக்கத்துக்கும் வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்துகொள்கிறேன்.

Leave a Reply