shadow

உதயநிதியுடன் மோதும் ஆர்.ஜே.பாலாஜி

தமிழ் திரையுலகம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான்கு அல்லது ஐந்து திரைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் வரும் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இரண்டு படங்களின் தகவல் தற்போது வெளிவந்துள்ளது

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் ஏற்கனவே பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நடிகர் ஆர்ஜே பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்த ‘எல்.கே.ஜி’ திரைப்படம் பிப்ரவரி 22ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ரிலீஸ் குறித்து ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: ‘அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, தேர்தல் தேதி அறிவிப்பு….! என அறிவித்து ‘பிப்ரவரி 22ல் இந்த படம் ரிலீஸ் என்ற் வாசகத்துடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யோன் ஜேம்ஸ் இசையில், விது ஒளிப்பதிவில் ஆண்டனி படத்தொகுப்பில் ருவாகியுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

Leave a Reply