shadow

உதயநிதியின் அடுத்த படத்தில் ஆத்மிகா

சினிமா, அரசியல் என இரண்டிலும் ஈடுபட்டு வரும் உதயநிதி நடிக்கும் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘கண்ணை நம்பாதே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தின் நாயகியாக நடித்த நடிகை ஆத்மிகா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் காமெடி கேரக்டரில் சதீஷ் நடிக்கவுள்ளார். இந்த படத்தை மு.மாறன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று சென்னையில் நடந்த இந்த படத்தின் பூஜையில் உதயநிதி, ஆத்மிகா, மாறன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் உதயநிதி நடித்த ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் வரும் 22ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply