shadow

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அழுத்தம் தரப்பட்டதா? திருமாவளவன்

திமுக கூட்டணியில் இணைந்துள்ள விசிக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுவார்கள் என்ற செய்தி வெளிவந்துள்ளது

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக தரப்பில் இருந்து எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்றும், அதே நேரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகள் இடையே ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் விசிக போலவே மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டும் தொகுதிகளிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற அழுத்தம் தரப்படவிருப்பதாக கூறப்படுகிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் அவர் திமுக எம்பியாகவே கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply