ஈரான் மீது ராணுவ நடவடிக்கை: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் போர் தொடுக்க வாய்ப்பிருந்தும் பேச்சுவார்த்தைக்கு தான் முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் இருநாடுகள் இடையிலான உறவு பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஈரான் மீது அமெரிக்கா கடந்த மாதம் தடை விதித்தது. அதுமட்டுமின்றி ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொள்ளவும் மற்ற நாடுகலைஅமெரிக்கா நிர்பந்தபடுத்தியது.

ஈரானுக்கு உரிய மரியாதையை அளித்தால் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த தயார் என்றும் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் என்றும் ஈரான் அதிபர் தெரிவித்திருந்த நிலையில் டிரம்பின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Reply