இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

“நாம் செய்தது சிறிய சாதனை இல்லை, நாட்டின் பெருமை” என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறியுள்ளார்.

சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது கடைசி நேரத்தில் திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்று தெரியவில்லை.

இந்த நிலையில் இந்த நிகழ்வை நேரில் பார்க்க பெங்களூர் வந்திருந்த பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறியதோடு, ‘நாம் இதுவரை செய்தது மிகப்பெரிய விஷயம் என்றும், தைரியமாக இருங்கள் என்றும், நான் உங்களுடன் இருக்கின்றேன் கவலை வேண்டாம் என்றும் ஆறுதல் கூறினார்.

அதேபோல் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இதுகுறித்து கூறியபோது, ‘இஸ்ரோ விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு உணர்வு, பேரார்வம் ஒவ்வொரு இந்தியருக்கும் தூண்டுதலாக அமைவதாகவும், விஞ்ஞானிகளின் அரிய பணிகள் வீணாகாது என்றும், எதிர்வரும் இந்திய விண்வெளித் திட்டங்களுக்கு அடித்தளமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply