shadow

‘இஸ்பாட் ராஜாவும் இதய ராணியும்’: இது யார் படத்தின் டைட்டில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது நீளமான வித்தியாசமான டைட்டில் வைக்கும் டிரெண்ட் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரு தமிழ் படத்திற்கு ‘இஸ்பாட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த ஹரிஷ் கல்யான் ஹீரோவாக நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகை ஷில்பா மஞ்சுநாத் நடித்து வருகிறார்.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிமுக செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிந்துவிட்டதாகவும் இவ்வருடம் டிசம்பரில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

 

Leave a Reply