இவர்தான்யா மக்களின் முதல்வர்: போலீசாருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை என அறிவிப்பு

போலீஸ் வேலை என்றாலே 24×7 என எந்த நேரமும் பணிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வரும் நிலையில் சமீபத்தில் ஆந்திர முதல்வராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி, போலீசார்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கும் திட்டத்தை இன்று முதல் அமல்படுத்தியுள்ளார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

தலைமை காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை விடுமுறை ஒவ்வொரு காவல்துறையினர்களுக்கும் வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட உள்ளதாகவும், இந்த விடுமுறைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு கமிட்டியின் மூலம் மொத்தம் 19 மாடல் விடுமுறை முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் அந்தந்த பகுதியில் உள்ள யூனிட் அதிகாரிகள் ஏதாவது ஒரு மாடலை தேர்ந்தெடுத்து வார விடுமுறையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த அதிரடி அறிவிப்பை பார்த்து பக்கத்து மாநிலத்தில் உள்ளவர்கள் நமக்கும் இவர்போல் ஒரு முதல்வர் கிடைக்க மாட்டாரா? என ஏங்கி வருகின்றனர்.

Leave a Reply