shadow

இவரைத் தெரியுமா?- சாகேத் ஜிண்டால்

3எம்எஸ்எல் ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பு வகிக்கிறார். 2001 செப்டம்பரிலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார். நிறுவனத்தின் தலைவர் டிபி ஜிண்டாலின் மூத்த மகன்.

கேஎம்எஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் டிஜி ஜிண்டால் குழும நிறுவனங்களில் இயக்குநராகவும் இருந்தவர்.

உருக்கு துறையில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். துறையில் புத்தாக்க முயற்சிகளை மேற்கொண்ட தொழில்துறையாளர்.

ஹரியாணா கேப்ஃபைன் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர். மேலும் இந்த நிறுவனத்தில் அன்றாட அலுவல் பணியில் ஈடுபடாத இயக்குநராகவும் பதவி வகித்தவர்.

தொழிலாளர்களை ஊக்கப்படுத்துவது, செலவுக் கட்டுப்பாடு, தயாரிப்பு தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவை துறைகளில் வல்லுநர்.

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை நிர்வாகவியலில் இளநிலை பட்டம் பெற்றவர்.

Leave a Reply