டிராக்டர் ஓட்டிய தோனி

நேற்று இசைஞானி இளையராஜா பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது என்பதும் திரையுலக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறினர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இளையராஜா குறித்த பிறந்த டிரெண்ட் நேற்று டுவிட்டர் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அவர்கள் டிராக்டர் ஓட்டுவது போல் ஒரு காட்சி உள்ளது

இந்த காட்சிக்கு பின்னணியாக இசைஞானி இளையராஜா அவர்களின் பின்னணி இசை ஒலிக்கப்படுகிறது. இந்த வீடியோவுக்கு மாபெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. பலர் தல தோனி மற்றும் இசைஞானியை பாராட்டி கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply