shadow

தமிழகத்தில் ஒயிட் போர்டு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இலவசமாக செல்லும் பெண்களை தரக்குறைவாக பேசுவதாக நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது புகார் எழுந்து உள்ளது

இதனை அடுத்து தமிழக அரசு இதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும் என்றும் ஒருவர் என்றாலும் பேருந்தை நிறுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது

வயது முதிர்ந்த மகளிருக்கு இருக்கையில் அமர உதவிபுரிய வேண்டும் என்றும் பெண் பேருந்து பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவும் ஏளனமாகவும் இழிவாகவும் பேசக்கூடாது என்றும் பெண் பயணிகள் ஏறும்போதும் இறங்கும்போதும் கண்காணித்து ஓட்டுநருக்கு சமிக்ஞை தரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது