shadow

இலங்கை பிரதமராக ரணில் மீண்டும் பதவியேற்பு

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் பதவியில் இருந்து அதிபர் சிறிசேனாவால் நீக்கப்பட்ட நிலையில் இன்று அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்று கொண்டார்.

ரணில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், நாடாளுமன்றத்தை கலைத்ததும் சட்டவிரோதமானது என்று இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்த நிலையில் இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச நேற்று ராஜினாமா ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து இலங்கை பிரதமராக ரணில் மீண்டும் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகிய நிலையில் சற்றுமுன் இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

 

Leave a Reply