shadow

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். மாவீரன் படத்தின் முதல் பாடலான ‘சீனா சீனா’ பாடல் சமீபத்தில் வெளியானது. கவிஞர்கள் கபிலன் மற்றும் லோகேஷ் வரிகளில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் ஒரே நாளில் 3மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மாவீரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.