இரவு 8 மணிக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாதா? எஸ்பிஐ வங்கி அறிவிப்பால் பரபரப்பு

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் இரவு 8 மணிக்கு மேல் பணம் எடுக்க ஒரு முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பெரும்பாலும் இரவு நேரத்தில் ஏடிஎம்மில் பணம் முறைகேடாக எடுக்கப்படுவதாக புகார்கள் குவிந்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த எஸ்பிஐ ஒரு புதிய வழி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது

இதன்படி இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணிவரை பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஏடிஎம்ல் பணம் எடுத்தால் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும் என்றும் அந்த ஓடிபியை பதிவு செய்தால் மட்டுமே ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும் என்றும் அறிவித்துள்ளது

எனவே இரவு 8 மணிக்கு மேல் காலை 8 மணிக்குள் ஏடிஎம்ல் பணம் எடுக்கச் செல்பவர்கள் தங்களுடைய மொபைல் போனை கையில் எடுக்காமல் சென்றிருந்தால் பணம் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புதிய நடைமுறை எஸ்பிஐ ஏடிஎம் மையங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் மற்ற ஏடிஎம்களில் பொருந்தாது என்றும் எஸ்பிபி அறிவித்துள்ளது

பாதுகாப்பு காரணங்களுக்காக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இதற்கு அனைத்து வாடிக்கையாளர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என எஸ்பிஐ தரப்பிலிருந்து கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Leave a Reply