shadow

இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டு அணியாக பிரிந்திருந்தபோது இருவரும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டதால், தேர்தல் ஆணையம் இந்த சின்னத்தை முடக்கி வைத்தது.

இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் உத்தரவிட வேண்டும் என்று பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை இன்று எடுத்து கொள்ளப்பட்டது.

இன்றைய விசாரணைக்கு பின்னர் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது பற்றி அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply